இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். குருவானவர் துலா ராசிக்கு 3வது மற்றும் 6வது வீட்டின் அதிபதி ஆவார். 3வது வீடு நல்ல இடமும் அல்ல மற்றும் கெட்ட இடமும் இல்லை. ஆனால் 6வது இடம் என்பது ஒரு கொடிய துர் ஸ்தானமாகும். மேலும் குரு துலா ராசியின் அதிபதி சுக்கிரனை பகையாக கருதுபவர். ஆனால் சுக்கிரன் குருவை சமமாக கருதுபவர். ஆகவே துலா ராசிக்கு குரு ஒரு கொடிய பாபி ஆகிறார். குரு இப்பொழுது பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். மேலும் மிதுன ராசி துலா ராசிக்கு 9வது இடம் ஆகும். 9வது இடம் என்பது மிகவும் ஓரு நல்ல ஸ்தானம் ஆகும். 2013வில் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சி பெருமளவு நல்ல பலனைத் தரும். ...