Skip to main content

2013 Rasi Palan: குரு பெயர்ச்சி (துலா ராசி)


இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். 

குருவானவர் துலா ராசிக்கு 3வது மற்றும் 6வது வீட்டின் அதிபதி ஆவார். 3வது வீடு நல்ல இடமும் அல்ல மற்றும் கெட்ட இடமும் இல்லை. ஆனால் 6வது இடம் என்பது ஒரு கொடிய துர் ஸ்தானமாகும். மேலும் குரு துலா ராசியின் அதிபதி சுக்கிரனை பகையாக கருதுபவர். ஆனால் சுக்கிரன் குருவை சமமாக கருதுபவர். ஆகவே துலா ராசிக்கு குரு ஒரு கொடிய பாபி ஆகிறார். 

குரு இப்பொழுது பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதிரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். மேலும் மிதுன ராசி துலா ராசிக்கு 9வது இடம் ஆகும். 9வது இடம் என்பது மிகவும் ஓரு நல்ல ஸ்தானம் ஆகும். 2013வில் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சி பெருமளவு நல்ல பலனைத் தரும்.

6வது இடம் என்பது கடன், நோய் மற்றும் எதிரிகளை குறிக்கும் இடம் ஆகும். இந்த வீட்டின் அதிபதி வலுக்காமல் இருந்தால் மிகவும் நல்லது. வலுத்து இருந்தால் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் நம்மை மிகவும் பாதித்து விடும். பலம் அற்ற குரு மிக நல்ல இடமான 9வது இடத்தில் இருப்பது நல்லது. ஆனால் குரு 3வது வீட்டின் பலனையும் சேர்த்து கொடுக்காமல் போய் விடும். 

இதுவரை இருந்து வந்த எதிர்மறை நிலை மாறி 2013ல் குரு பெயர்ச்சியில் துலா ராசிக்காரர்கள் சற்று நிம்மதியான சூழ்நிலையை அனுபவிக்கலாம். இப்பொழுது நாம் 2013 வருடத்திற்க்கான குரு பெயர்ச்சியின் பலன்களை நாம் பார்ப்போம்.

31.05.2013 முதல் 08.06.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

நண்பர்கள், சகோதர உறவுகள் இருந்து வந்த சற்று இறுக்கமான சூழ்நிலை மாறலாம். ஆனால் உறவில் பெரிய மாற்றங்கள் நிகழாது. துலா ராசியினர் எடுக்கும் சில முடிவுகள் அவர்களுக்கு நண்பர்கள், சகோதர உறவுகளில் மத்தியில் நல்ல பெயரை கொடுக்காது. கடன், நோய் அல்லது எதிரியால் ஏற்படும் துன்பங்கள் சில இருந்தாலும் அதனால் துலா ராசியினர் பாதிப்பு அடைய மாட்டார்கள்.


08.06.2013 முதல் 02.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

குரு 08.06.2013 அன்று அஸ்தமனமாகிறார். இந்த காலத்தில் குருவால் கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் தடைப்படும். மேலும் துலா  ராசி மற்றும் துலா இலக்கின மக்கள் அனைவரும் நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 02.07.2013 அன்று குரு மீண்டும் உதயமாகிறார்.

இக்காலத்தில் எதிரிகள் துலா ராசியினரை கண்டு ஒதுங்கி போய் விடுவார்கள். நோய் மற்றும் கடன் சம்பந்த பட்ட விசயங்கள் கட்டுக்குள் அடங்கி நல்ல பலனை அளிக்கும். சிலருக்கு இந்த பிரச்சினைகளில் முற்றிலும் தீர்வு கிடைக்கும். ஆனால் நண்பர்கள் மற்றும் சகோதர உறவுகள் விசயத்தில் சரியான அணுகுமுறையை கடை பிடிக்கவில்லை என்றால் உறவுகள் மிகுந்த பாதிப்பை அடையும். இதனால் துலா ராசியினர் மேல் கெட்ட அபிப்ராயம் உண்டாக வாய்ப்பு உண்டு. மனதினுள் சற்று நம்பிக்கையை இழந்து காணப்படுவார்கள். 

02.07.2013 முதல் 13.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

நண்பர்கள் மற்றும் சகோதர உறவுகள் விசயத்தில் சற்றே முன்னேற்றம் காண்பார்கள். துலா ராசியினர் தனது கவுரவம் பாதிக்காத வண்ணம் செயல் படுவார்கள். நோய், கடன் மற்றும் எதிராளி விசயத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டிய நீர்பந்தம் ஏற்படலாம். ஆனால் துலா ராசியினர் நிம்மதியான சூழ்நிலையை தொடர்ந்து அனுபவித்து வருவார்கள். சற்று நம்பிக்கையை வளர்த்து கொள்ளும் காலம் இது. 

13.07.2013 முதல் 30.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

கடன், நோய் மற்றும் எதிரிகள் விசயத்தில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். சிலருக்கு இந்த பிரச்சனைகளில் முற்றிலும் வெற்றி கிட்டும் நேரம் இது. சகோதர உறவுகள் மற்றும் நண்பர்கள் உறவில் நிதானத்துடன் செயல் பட வேண்டும். இல்லை என்றால் உறவில் வெளியில் தெரியாத அளவு விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு. துலா ராசியினர் மனதில் நம்பிக்கை இழந்து இருப்பார்கள். 

30.07.2013 முதல் 15.08.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

துலா ராசியினர் சற்றே நம்பிக்கையுடன் எல்லா விசயங்களையும் அணுகுவார்கள். நண்பர்கள் மற்றும் சகோதர உறவுகளில் இருந்து வந்த மந்த நிலைமை மாறும். ஆனால் சூழ்நிலைகளில் பெரிய அளவு மாற்றம் இருக்காது. 

15.08.2013 முதல் 23.09.2013 முடிய  குரு பெயர்ச்சியின் பலன்கள்:

சகோதர உறவுகள் மற்றும் நண்பர்கள் உறவில் சற்றே முன்னேற்றம் காணப்படும். ஏற்கனவே இருந்து வந்த இடைவெளி சற்று குறையும். மீண்டும் கடன், நோய் மற்றும் எதிரிகள் விசயத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். மனதில் சற்று நம்பிக்கை உண்டாகும் காலம் இது. 

23.09.2013 முதல் 08.11.2013 முடிய  குரு பெயர்ச்சியின் பலன்கள்:

மீண்டும் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். ஆனாலும் மனதினுள் நம்பிக்கை குறைய ஆரம்பிக்கும். சகோதர உறவுகள் மற்றும் நண்பர்கள் உறவு சற்றே சறுக்கலை சந்திக்கும். மற்றவர்கள் மத்தியில் துலா ராசியினர் பற்றிய அபிப்ராயம் அவ்வளவாக நன்றாக இருக்காது. ஆனால் கடன், நோய் மற்றும் எதிரிகள் சம்பந்த பட்ட விஷயங்கள் முழு வெற்றி அளிக்கும். 


8.11.2013 முதல் 21.02.2014 முடிய  குரு  பெயர்ச்சியின் பலன்கள்:

குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.

துலா ராசியினரின் கவனத்திற்கு:

1. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி பலன் நமது வாழக்கையில் சிறிய அளவே மாற்றங்களை கொடுக்கும் சக்தி உள்ளது. 

2. அவரவர் தசா மற்றும் புத்தி பலன்களை பொறுத்தே வாழ்கையில் நிகழ்வுகள் நடைபெறும்.

3. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் உங்களின் தசா மற்றும் புத்தி அடிப்படையில் சற்று மாறுபட்டு நடைபெறும்.

4. துலா ராசியினருக்கு செவ்வாய், 11வது வீட்டு அல்லது 3வது வீட்டு கிரகத்தின் திசை நடந்து அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் சகோதர உறவு மற்றும் நண்பர்கள் உறவில் பெரிய அளவு தொய்வு ஏற்படும்.

5. துலா ராசியினருக்கு 3வது, 4வது வீட்டு கிரகம் அல்லது இலக்கின அதிபதி கிரகத்தின் திசை நடந்து அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் கண்டிப்பாக கவுரவ குறைச்சல் ஏற்படும்.

6. துலா ராசியினருக்கு இலக்கின அதிபதி அல்லது 3வது வீட்டு அதிபதி அல்லது சந்திரன் திசை நடந்து அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் மனதில் இனம் தெரியாத பயம் ஏற்படும். மேலும் தன்னம்பிக்கையை முற்றிலும் இழந்து தவிப்பார்கள்.

7. துலா ராசியினருக்கு 4, 6 அல்லது 12வது வீட்டு திசை நடந்து அந்த கிரகம் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் இது நாள் இருந்து வந்த நோய் முற்றிலும் அகலும்.

8. துலா ராசியினருக்கு 2, 6 மற்றும் 8வது வீட்டுக்கு உரிய கிரகம் அல்லது குருவின் திசை நடந்து அந்த கிரகம் நல்ல இல்லத்தில் இருந்தால் கடன் பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும்.

9. துலா ராசியினருக்கு வலுவிழந்த 6வது இல்லத்து கிரகம் திசை நடந்தால் எத்ரிகள் இவர்களிடம் தோற்று ஓடுவார்கள்.

10. துலா ராசியினர் சகோதர விசயங்களில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் கண்டிப்பாக குடும்பத்தில் மதிப்பை இழக்க வேண்டி வரும்.

11. துலா ராசியினர் மேலுக்கு நல்லவர்கள் போல் நடந்து மனதில் கெடுதலான எண்ணங்களை வளர்த்து வந்தால் அவர்களை சுற்றி உள்ளவர்கள் அவர்களை தவறாக பேசும் நிலை வீட்டிலும், வெளியிலும் ஏற்படும்.

14. குருவின் பலமற்ற பார்வை 1வது, 3வது மற்றும் 5வது வீட்டில் விழுகின்றது. துலா ராசியினர் சற்று கஷ்டப்பட்டு மனதினை கட்டுக்குள் கொண்டு வருவார்கள். 

15. குருவின் பரிகாரம் செய்யும் பொழுது இந்த குரு பெயர்ச்சியால் வரும் துன்பங்கள் குறைந்து இன்ப சூழ்நிலை நிலவும். 

குரு பரிகார முறைக்கு எங்களது www.jothidapariharam.blogspot.in என்ற வலைதளத்திற்கு வாருங்கள். படித்து பயன் பெறுங்கள். மேலும் உங்கள் ஜாதகத்தை சரியாக கணிப்பதற்கு Author Meganathan. G ஐ தொடர்பு கொள்ளுங்கள். வெளி நாட்டில் வசிப்பவர்கள் Pay Pal மூலம் பணம் செலுத்தி ஜாதகம் பற்றிய முழு விபரங்களை பெற்று கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

EFFECTS OF MOON ON THE THULA LAGNA AND 12 ZODIAC SIGNS

"EFFECTS OF THE MOON (CHANDRA) ON THE THULA LAGNA (LIBRA RISING) IN THE 12 DIFFERENT ZODIAC SIGNS" The Moon has the lordship over the 10th house for the Thula Lagna (Libra Rising), that is directly responsible for the income from profession or business. The Sukra (who has the lordship of  Thula Lagna) does not treat the Moon as a friendly planet and the Moon considers the Sukra to be equal. Thus the Moon is neither a malefic nor a benefic planet to the  Thula Lagna (Libra Rising). Let us see the qualities of the  Thula Lagna (Libra Rising), when the Moon stays in 12 different zodiac signs. 1. Thula Lagna and Mesha Rasi: "Moon in the 7th house" - Authoritative and self serving character. Focus on profession and getting average results. 2.  Thula Lagna and Rishaba Rasi: "Moon in the 8th house" - Confused mindset, Mixed behavior, sometime very adjusting and displaying innocence and sometime displaying very self serving character.  3....

2024 SEPTEMBER LIBRA CAREER PREDICTION

2024 September Libra Financial Astrology 2024 September Thula Rasipalan For Salaried Peoples: Job searches, Job promotions & Project implementations: Delays & disappointing progress can be expected during the entire month of September 2024. Work Efficiency: Mixed efficiency is possible from 1 st to 16 th September 2024. Good efficiency is possible from 17 th to 30 th September 2024. Income from Investments: Stable profits & returns are possible from 1 st to 16 th September 2024. Fluctuating profits are possible from 17 th to 30 th September 2024. For Business Peoples: Sales & Marketing: Limited progress & weak sales can be expected during the entire month of September 2024. Productivity: Delays impacting the productivity is likely from 1 st to 16 th September 2024. Good productivity is likely from 17 th to 30 th September 2024. Profits & Payment collections: Stable profits & good payment collections are likely from 1 st to 16 th...

2014 - 2017 SANI SADE SATI RESULTS FOR THULA RASI

2014 - 2017 Shani Peyarchi Palangal for Tula Rashi (Libra sign) natives: The Thula Rasi (Libra sign) natives is about to enter the last phase of Shani Sade Sati period for them. The Shani would be in the 2nd position for the Thula Rasi (Libra sign) natives for the next 2 1/2 Years. What does it mean to the Thula Rasi (Libra sign) natives? Let us find out the probable results for the Thula Rasi (Libra sign) natives for the next 2 1/2 Years. Before that let us find out the reason for Shani assuming important role in the Astrology. Importance of Sani: Among all the 9 planets, the Shani moves very slowly taking nearly 2 ½ Years to cross a single Zodiac sign. If the position of the Shani is favourable and gets stronger strength, then the 2 ½ year’s period remain comfortable. But on the other hand, if the Sani remains in a malefic house and gets poor strength, then it will make the natives's life treacherous for the entire 2 ½ Years period. That is, the longer transit period of ...